மா.கா.பா.ஆனந்தின் படத்திற்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி

மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘அட்டி’ படத்தை விஜய பாஸ்கர் இயக்கி உள்ளார். படத்தின் அறிமுக காட்சியில், நடிகர் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் விஜய பாஸ்கர் கூறியதாவது:–

"இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பெரும்பாலானவர்களிடம் இருந்து எழுப்பப்பட்ட கேள்வி, "அட்டி என்றால் என்ன?" இதற்கான பதிலை நாங்கள் கூறுவதை விட, ஒரு முக்கிய பிரபலம் கூறினால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். இதற்காக விஜய் சேதுபதியை அணுகியபோது, மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி, நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக ‘அட்டி’ படம் பற்றி பேசியிருக்கிறார். இது, படத்துக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியிருக்கிறது."


No comments:

Post a Comment