சண்டையிடும் நந்திதா - ரெஜினா

படத்துக்காக மோதலுக்கு பயிற்சி எடுக்கும் தகவல்தான். ஆக்‌ஷன் காட்சிபற்றி எந்த ஐடியாவும் இல்லாமலிருந்த ரெஜினாவும், நந்திதாவும் இயக்குனர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடிக்கின்றனர். இதன் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரெஜினா, நந்திதா மோதிக்கொள்ளும் சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர். இதுபற்றி அவர்களிடம் இயக்குனர் சொன்னபோது இருவரும் தயங்கினர். ஆக்‌ஷன் காட்சியில் நடித்த அனுபவம் இல்லையே என்று பயத்துடன் கூறியதையடுத்து இருவருக்கும் சண்டை பயிற்சி அளிக்கப்பட்டது. சினிமா ஸ்டண்ட் பற்றிய டெக்னிக்குகளை கற்றுக்கொண்டதும் டூப் போடாமல் சண்டை காட்சியில் நடிக்க இருவரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். கேமரா முன் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ள இருவரும் தற்போது தயாராகிவிட்டனர்.


கீர்த்தி சுரேசுக்கு போட்டி யார்?

சமீபகால கதாநாயகிகளில் ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர், கீர்த்தி சுரேஷ். இவர், பழைய கதாநாயகி மேனகாவின் மகள். இவருக்கு போட்டியாக தமிழ் பட உலகுக்குள் நுழைந்திருப்பவர், மஞ்சிமா மோகன். கீர்த்தி சுரேசை விட, மஞ்சிமா மோகனுக்கு புது படங்கள் நிறைய ஒப்பந்தமாகின்றன.

  

வருத்தத்தில் விஜய் சேதுபதி

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,’ ‘ரம்மி’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தவர், காயத்ரி. இப்போது, ‘மெல்லிசை’ என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். "என்னுடன் நடித்த திறமையான கதாநாயகிகளில் காயத்ரியும் ஒருவர். அவருக்கு ஏன் அதிக பட வாய்ப்புகள் வருவதில்லை? என்பது புரியாத புதிராக உள்ளது. அவருக்கு ஒரு இடம் கிடைக்காதது, வருத்தமாக இருக்கிறது" என்கிறார், விஜய் சேதுபதி.