பிரபுதேவா - ஜெயம் ரவி - அரவிந்த்சுவாமி கூட்டணியில் 'போகன்'

'ஜெயம்’ ரவி நடிப்பில், பிரபுதேவா தயாரிக்கும் படம் ‘போகன்’. சென்ற வருடம் வெளியாகி வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லஷ்மன் இயக்கும் இப்படத்திலும் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடி ஹன்சிகா நடிக்கிறார். ஜெயம் ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் என ரோமியோ ஜூலியட் படத்தில் இணைந்தோர் ‘போகன்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம்ரவியுடன் மோதிய அரவிந்த்சுவாமியும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆ ம் தேதி பெரம்பூர் பின்னிமில்லில் துவங்குகிறது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment