வெற்றி மாறனின் ‘வட சென்னை’ படம் ரத்து

சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வருக்கிறார் கவுதம் மேனன். ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல் காட்சிகளையும், பேட்ச் ஒர்க்கையும் சிம்பு முடிக்க வேண்டி இருந்தது. இதனால், ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பை சற்று தள்ளிப்போட வேண்டிய சூழல் எழுந்தது. ‘கொடி’ படத்தில் நடித்து வந்த தனுஷ் அடுத்து வெற்றி மாறனின் ‘வட சென்னை’ படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டதால் தனது கால்ஷீட்டை கவுதம் மேனனுக்கு ஒதுக்கி தந்தார் தனுஷ்.


இதில் தனுஷூக்கு ஜோடியாக புதுமுக ஹீரோயின் நடிக்கிறார்.  வெற்றி மாறன் படம் தள்ளிவைக்கப்பட்டது சிலருக்கு அதிர்ச்சியாகவும், கவுதம் மேனன் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பது சிலருக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது. தற்போது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் ‘இது நம்ம ஆளு’ பணிகளை முற்றிலுமாக முடித்துவிட்டு சிம்பு திரும்பியதும், ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பையும் நடத்த கவுதம் மேனன் திட்டமிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment